பால் விலையை உயர்த்தக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் போத்தா-புரம் கிராமத்திலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முன், தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பால் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, மாடுகள் மற்றும் பால் கேன்களுடன் நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்-தது.

சங்க நிர்வாகி வெங்கடேசன் தலைமை வகித்தார். பழனி முன்னிலை வகித்தார். இதில், விவசாய சங்க நிர்வாகிகள் கஜேந்-திரன், ராஜ்குமார், சங்கர், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.ஆர்ப்பாட்டத்தில், பசும்பால் லிட்டருக்கு, 45 ரூபாயும், எருமை பாலுக்கு, 55 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும். கறவை மாட்-டுக்கு காப்பீடு, 100 சதவீதம் இலவசமாக வழங்க வேண்டும். தனியாருக்கு நிகராக, ஆவின் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பாலுக்கான ஊக்கத் தொகையை, 3 ரூபாயில் இருந்து, 7 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தீவன விலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், பால் வழங்கும் விவசாயிகள், தங்கள் பால் மாடு மற்றும் பால் கேன்களுடன் கலந்து கொண்-டனர்.

Advertisement