லோக்சபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடங்கியது; எதிர்க்கட்சிகள் கடும் அமளி

10



நமது டில்லி நிருபர்




பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 30) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவை மதியம் 2 மணி வரை சபாநயாகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த, 20ல் தொடங்கிய நிலையில், 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் பார்லி.,யிலும் எதிரொலித்த நிலையில், கூட்டத்தொடர் நடக்காமல், இரு சபைகளிலும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் கூடி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் (ஜூலை 30) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா….

ராஜ்யசபா அமளிக்கு இடையே காலை 11 மணிக்கு கூடி நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நட்டா பேசுகையில், '' அவையின் தலைவர் மூலமாக நான் கூற விரும்புவது என்னவென்றால், எதிர்க்கட்சியின் பங்கு முற்றிலும் எதிர்மறையாகவே இருந்துள்ளது.

கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, அவையைச் சீர்குலைப்பதிலும், அவை செயல்படுவதைத் தடுப்பதிலுமே அவர்களின் முழு கவனமும் இருந்து வருகிறது'', என்றார்.

Advertisement