தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம்; முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
சென்னை: முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் மின்சார வாகனங்கள், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளாவிய நிறுவனங்களுடன் முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், இன்று (ஜூலை 30)) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழகத்தில் 2,920க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு வீடியோ!
முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தான முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஹுண்டாய் முதலீடு என்ன ஆனது?
போலீஸ் ஆதரவில் நிறைய தொழில்கள் கொடிகட்டி பறக்கின்றன ...
தமிழக பாரம்பரிய சேலை உடுத்திய தமிழ்ப் பெண்மணி அருகில் நின்று கொண்டிருக்கும் கோட் அணிந்த அந்த அம்மையார் எந்த வெளி நாட்டைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர்?
ஏதாவது ஒரு நோட்டம் வெட்டுண்ட உனக்கு subject டை பாரு
ரொம்ப மொக்கை கருத்து.
Its a good news. Hope to get many more MOU like this
மாசத்துக்கு கோட் போட்ட ஆளுங்க நாலு பேரை கூட்டிட்டு வந்து கையெழுத்து போட்டு போட்டோ எடுக்கறதோட சரி. ஒரு ஆணியும் வரல
புரிந்துணர்வு ஒப்பந்தம்.. சென்ற ஆட்சியில் கேட்டு கேட்டு சலித்துப் போன வார்த்தை..