ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு
வாஷிங்டன்: வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணத்தை நேரலை செய்வதாக நாசா அறிவித்துள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவை நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வே, முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்த அரிதான முழு சூரிய கிரகணம் நிகழுகிறது.
இந்த நிகழ்வை பொதுமக்களும் கண்டு ரசிக்க, முழு சூரிய கிரகணத்தை, தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களில் நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல், போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் வடபகுதி மக்கள், சூரியன் முழுமையான நிலவால் மறைக்கப்படும் நிகழ்வை காண முடியும். அதேபோல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.
இந்த முழு நிகழ்வும் சுமார் 4 மணிநேரம் 23 நிமிடங்கள் நீடிக்கும். இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12ம் தேதி இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூகவலைதள நேரலை மூலம் காண முடியும்.
1967லிலேயே தமிழ் நட்டை சூரிய கிரகஹணம் பிடித்துவிட்டது
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே மக்கள் சடங்கு, திருஷ்டி, பரிகாரம் ணு அழுக்கு வேட்டி, கிழிசல் புடவை இத்யாதிகளை நதி, கடலில் அவுத்து உடவேண்டாம்னு கேட்டுக் கொள்கிறேன்.