சுற்றுச்சுவர் இல்லாத கீழுர் அரசு பள்ளி
கரூர்: புலியூர் அருகே, வெள்ளாளப்பட்டி கீழூரில் உள்ள அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாதால், திறந்த வெளி மது பாராக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
புலியூர் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 14வது வார்டில் வெள்ளாளப்பட்டி கீழூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால், சட்ட விரோத செயல்கள் நடந்து வருகிறது. மாலை, 6:00 மணிக்கு மேல் பள்ளி வளாகத்தில் மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களையும், உணவு பொட்டலங்களையும், காலி வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கப், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை குடிமகன்கள் வீசிவிட்டு செல்கின்றனர்.
மறுநாள் காலை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இதை பார்த்து தவிக்கின்றனர். இங்கு வரும் குடிமகன்கள், பள்ளி விடுமுறை நாட்களில் பகலிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக அலுவலர் முதல், கலெக்டர் வரை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வரை சுற்றுச்சுவர் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் பள்ளிகுழந்தைகள் கல்வி பயின்று வருகினறனர்.
மாணவ, மாணவியரின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம்; முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
-
ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு
-
லோக்சபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடங்கியது; எதிர்க்கட்சிகள் கடும் அமளி
-
ஆன்லைன் மூலம் அனைத்து டெண்டர்களும் வெளியிடப்படும்; அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
-
எல் நினோ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு
-
டாஸ்மாக் ஊழல் வழக்கு; செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி