பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க அவகாசம்

கோவை: பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க, செப். 26-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்த, பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இல்லாதவர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பிறப்பை பதிவு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பதிவு செய்திருந்தால் அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement