ஆடித்திருவிழாக்கள் ஆடு விலை உயர்வு

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் கிராமக் கோயில்களில் ஆடி திருவிழாக்கள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் கிடா விருந்து வைப்பதால் ஆடுகள் விலை உயர்ந்தது. திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள கோயில்களில் ஆடி திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. விழாக்களை முன்னிட்டு வீடுகளில் கிடா விருந்து நடக்கிறது. இதனால் இறைச்சிக்கான ஆடுகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது. திருவாடானையில் வாரந்தோறும் திங்களன்று ஆட்டு சந்தை நடைபெறும். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து ஆடு வியாபாரிகள் கூடுவார்கள்.

ஆடுகளின் தேவை அதிகரிப்பால் அவற்றின் எடை மற்றும் தரத்திற்கு தகுந்தாவாறு ரூ.500 முதல் 700 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆடுகள் வாங்க வந்த மக்கள் விலை உயர்வால் சிரமமடைந்தனர். திருவிழாக்கள் முடியும் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  

––

Advertisement