வாகன தணிக்கை வீடியோ எடுத்த டிரைவர் கைது
கும்மிடிப்பூண்டி, ஆக. 1–
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி, சோதனைச்சாவடியை கடந்த போது, அதன் டிரைவரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷம்பால், 26, என்பவர், வாகன தணிக்கையை வீடியோ எடுத்து, முகநுாலில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். அதை, பணியில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் ஷம்பால், அங்கிருந்து நாற்காலிகளை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து துறையினர் அளித்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, டிரைவர் ஷம்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement