45 கிலோ குட்கா பறிமுதல்
அன்னூர்: அன்னூரில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 45 கிலோ குட்கா பிடிபட்டது.
அன்னூர் வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை குறித்து போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று அருகம்பாளையத்தில், ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அழகேசன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 45 கிலோ குட்கா பொருட்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை பிடிபட்டன.
போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா பதுக்கி வைத்திருந்த கருமத்தம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 41 என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement