அமைச்சர் ஆனந்திற்குத.வெ.க.,வினர் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் ஆனந்திற்கு, த.வெ.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்றார். இதற்காக, விழுப்புரம் சுற்றுலா மாளிகைக்கு வந்த அமைச்சர் ஆனந்திற்கு, த.வெ.க., மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், வடிவேல், மாவட்ட மருத்துவரணி திருமாவளவன், ராஜகணபதி, தெற்கு நகர நிர்வாகி செந்தில்குமார், கோபிநாத், வளவனுார் முன்னாள் பேரூராட்சி சேர்மன் முருகவேல், விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் துணை சேர்மன்  சக்திவேல், வளவனுார் கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் சீத்தாகலியபெருமாள், இளங்காடு ஊராட்சி தலைவர் விஜயன், கல்லப்பட்டு ராமநாதன், கோலியனுார் ஒன்றிய செயலாளர் மைக்கேல்அந்தோணி, ஒன்றிய கவுன்சிலர் பாரத், நிர்வாகி அமுதா, மகளிரணி நிர்வாகி ஜெயந்தி, தெற்கு மாவட்ட பொருளாளர் சுரேஷ், அரசு போக்குவரத்துக்கழக மண்டல தொழிற்சங்கம் செந்தில்குமார், மாவட்ட தொழிற்சங்கம் மோகன், மோகனசுந்தரம், முருகன், கார்த்திகேயன், நிர்வாக பணியாளர் சங்கம் சிவராம்குமார், காணை ஒன்றியம் கிருஷ்ணமூர்த்தி உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Advertisement