விவசாயிகள் மீதான நடவடிக்கை விவசாய சங்கங்கள் கண்டனம்
பல்லடம், ஆக. 1–
இருகூர் – பெங்களூரு பாரத் பெட்ரோலியம் எரிவாயு குழாய் பதிப்பு பணிக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது போலீசார் மேற்கொண்டு வரும் கைது நடவடிக்கைக்கு, விவசாய சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து:
விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில்தான் விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக கைது நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மாற்று வழிகளை அரசு பரிசீலிக்க வேண்டும்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவர் ஈஸ்வரன்:
விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளை விவசாயிகள் ஏற்க முடியாது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்து வரும் அவர்களின் கருத்துகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கைது நடவடிக்கைகளை கைவிட்டு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும்.
---
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை