காவல்துறையின் பயனற்றபொருட்கள் ஏலம் விடப்படும்  

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையின், தொழில்நுட்ப கிடங்கில் பயற்ற பொருட்கள் வரும் 10 ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட காவல் துறை செய்திக்குறிப்பு : மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவின், தொழில்நுட்ப கிடங்களில் உள்ள அதிகளவிலான பயன்பாடற்ற பொருட்கள், வரும் ஆக., 10 ம் தேதி விழுப்புரம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வைத்து, பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்போர், உரிய அங்கீகார சான்றிதழ் நகலை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். திறந்த முறை ஏலம் நடத்தப்படும். ஒவ்வொரு ஏலதாரரும், ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும். அதிகபட்ச ஏலதொகையை மேற்கொள்காட்டி தேர்வாகும் ஏலதாரர், ஏலம் முடிவடைந்த உடனே ஜி.எஸ்.டி.,யோடு சேர்த்து முழு ஏலதொகையையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். உடனே முழு தொகையை செலுத்த தவறினால், ஏலத்தில் பெற்ற பொருட்கள் ஒப்படைக்கப்பட மாட்டாது. அடுத்த அதிகபட்ச ஏல தொகையை மேற்கொள்காட்டிய ஏலதாரர் தேர்வாவார். அவர், அந்த பொருட்களுக்கான முழு தொகையையும் செலுத்திய பின்னரே, ஏல பொருட்கள் அவரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement