பேனர் வைக்க எதிர்ப்பு வி.சி.,போராட்டம்
கச்சிராயபாளையம், ஆக. 1-
வடக்கனந்தல் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வி.சி., கட்சியினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வராயன் மலையில் நேற்று நடந்த கோடை விழாவில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு கலந்து கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் அமைச்சரை வரவேற்று கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையத்தில் வி.சி., கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்றனர்.
அப்போது, பேரூராட்சியிடம் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் பேனர் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை கண்டித்து, நேற்று பகல் 2.30 மணி அளவில் வி.சி.,மண்டல செயலாளர் பொன்னிவளவன் தலைமையில் நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து, மாலை 5.30 மணி அளவில் உள்ளிருப்பு விலக்கி கொள்ளப்பட்டது.
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்