லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார், திருக்கோவிலுார் சாலையில், சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் செனறு விசாரித்தனர். அப்போது, அங்கு லாட்டரி சீட்டு விற்ற திருவெண்ணெய்நல்லுார் மேற்கு தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ராஜாவை, 51; கைது செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, அவரிடமிருந்து 33 லாட்டரி சீட்டுகள் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement