மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பண்ருட்டி அடுத்த பெரியஎலந்தம்பட்டு லெனின் தெருவை சேர்ந்தவர் தவிடன் மகன் மலர்மன்னன்,40; விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த சரளா என்பவரை  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சரளா அருகில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். தொடர்ந்து   மனைவியுடன் மலர்மன்னனுக்கும் தகராறு ஏற்பட்டுவந்தது.  இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மலர்மன்னன் வெளியே வராததால் வீட்டின் கதவு உடைத்து பார்த்த போது மலர்மன்னன் துாக்குபோட்டு இறந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisement