கிராமப் பகுதியில் மின்தடை பொதுமக்கள் கடும் அவதி
புதுச்சேரி: புதுச்சேரி கிராம பகுதி முழுதும் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
புதுச்சேரி – கடலுார் சாலை, காட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் உள்ள மின்சாரம் பிரித்து கொடுக்கும் பவர் பீடர் நேற்று இரவு வெடித்து சிதறியது. இதனால் மணவெளி, பாகூர், ஏம்பலம், தொகுதி முழுதும் இரவு 8:20 மணி முதல் மின் வினியோகம் தடைப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ.,க்கள்., மோகன்தாஸ், ராமு, செந்தில்குமார் ஆகியோர், மின்துறை அதிகாரிகள், ஊழியர்களை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின், மின்துறை ஊழியர்களால் பழுது சரிபார்க்கப்பட்டு இரவு 10:15 மணிக்கு மின்சாரம் கிராம பகுதி முழுதும் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது. இதனால் கிராமப் பகுதிகளில் 2 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும்
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? ஸ்டாலின் கேள்வி
-
129 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல்; கள ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
-
திருட்டு போன செம்மர கட்டைகள் மீட்பு
-
மரக்கன்று நடவு செய்து புதுமண தம்பதியர் குஷி
-
முதியோர் நலன் முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்
-
குழந்தைகளுக்கு வேகமாக பரவுகிறது ‘தக்காளி காய்ச்சல்’