குழந்தைகளுக்கு வேகமாக பரவுகிறது ‘தக்காளி காய்ச்சல்’
கோவை: கேரளத்தில் இருந்து பரவிய தக்காளி காய்ச்சல், தற்போது கோவையை சுற்றியுள்ள குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உள்ளங்கை, கால், வாய் பகுதியில், சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்படுத்தி, அரிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை உண்டாக்குகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தையுடன் நெருங்கிப் பழகுவது, தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றின் மூலம், இத்தொற்று பரவும்.
தினசரி இருமுறை குளிப்பது, உடலைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாயில் புண்கள் இருந்தால், காரமில்லாத திரவ உணவு, போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வது அவசியம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்,‘‘ காக்சாக்கி ஏ 16 என்ற வைரஸ் மூலம் இது பரவுகிறது. காட்சிக்கு சின்னம்மை போலவே இருக்கும். சின்னம்மையில் அதிக காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். ஆனால் இதில், தடிப்புகளே முக்கிய அறிகுறி. அதிக காய்ச்சல் இருக்காது. இருப்பினும், குழந்தைகள் நல மருத்துவரிடம் பரிசோதிப்பது அவசியம். விரைவில் குணப்படுத்தலாம் என்பதால், தேவையில்லாத பயம் வேண்டாம் ,’’ என்றார்.
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்