முதியோர் நலன் முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்
அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கும் முதியோருக்கு, ரத்த ஓட்டம் குறைந்து, தோல் திசுக்கள் சேதமடைந்து படுக்கைப்புண் உருவாகும் அபாயம் இருப்பதால், பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார், பொது நல மருத்துவர் டாக்டர் கவுதம்.
அவர் கூறியதாவது:
இடுப்பு, குதிகால், கணுக்கால், முழங்கை, தோள்பட்டை மற்றும் தலையின் பின்பகுதி போன்ற எலும்புகள் வெளிப்படையாக தெரியும் இடங்களில் படுக்கைப்புண் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இப்பகுதிகளில் தோல் நிறம் மாறியிருக்கிறதா, புண்கள் இருக்கிறதா என தினசரி கண்காணிப்பது அவசியம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வேறு பக்கம் மாற்றி படுக்க வைக்க வேண்டும்.
கால் முட்டி, கணுக்கால்களின் கீழே மென்மையான தலையணை பயன்படுத்துவதால், உராய்வை குறைக்கலாம். படுக்கையில் இருந்து நகர்த்தும் போது, தோலை நேரடியாக தொடாமல், துணி அல்லது பெட்ஷீட் உதவியுடன் மெதுவாக மாற்ற வேண்டும்.
வயதாகும் போது, சருமம் சுருங்கி மிக மென்மையாக மாறிவிடும். கடுமையாக அழுத்தி தேய்க்காமல், வெதுவெதுப்பான நீர், மிதமான சோப்பு பயன்படுத்தி தினசரி சுத்தம் செய்ய வேண்டும்.
சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். சிறுநீர் அல்லது மலம் கழித்த உடனே, டயப்பரை மாற்றி, அந்தப் பகுதியை உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் படுக்கைப்புண் உருவாக்கலாம்.
படுக்கை புண் உள்ள பகுதி அடர் சிவப்பு அல்லது நீல நிறமாக மாறுதல், துர்நாற்றத்துடன் சீழ் வெளியேறுதல், வீக்கம் அல்லது அதிக வெப்பம் ஏற்படுவது, திடீர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
@block_B@ ‘உணவில் இருக்கு மருந்து’ ‘‘புரதச்சத்து நிறைந்த உணவு, உடல் திசுக்களை விரைவில் சீராக்கும். முட்டை வெள்ளைக்கரு, பால், பருப்பு வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். விட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்த உணவு, படுக்கைப்புண் ஆற உதவும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவு அவசியம். மருத்துவ சிகிச்சையுடன், பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்தினாலே, படுக்கைப்புண் விரைவில் குணமாகும்,’’ என்றார் டாக்டர் கவுதம்.block_B
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்