மரக்கன்று நடவு செய்து புதுமண தம்பதியர் குஷி

சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் கார்த்திக் மேத்தா. இவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞரான மதுமிதா என்பவருக்கும், ஜூலை 17ம் தேதி கொண்டாட்டங்கள் ஏதுமின்றி நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் நடந்தது.

தங்களின் திருமணத்தை கொண்டாடும் வகையில், புதுமணத்தம்பதிகள், மரக்கன்றுகள் நட முடிவு செய்தனர். ஸ்ப்ரெட் லவ்(Spread love) என்ற தனியார் அமைப்புடன் இணைந்து, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதில் வேம்பு, இலுப்பை, பூவரச மரம், மஞ்சள் கொன்றை, கடம்பம், மாமரம் போன்ற 20 வகையான, 100 நாட்டு மரக்கன்றுகளை மாணவர்களுடன் இணைந்து நடவு செய்தனர்.

Advertisement