பிரதமர் மோடி பற்றி அருவருக்கத்தக்க பேச்சு; வாய்க்கொழுப்பில் பேசிய பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ
-நமது நிருபர்-
பிரதமர் மோடி பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய நொய்டா மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பெண், ''நான் என் தவறை உணர்ந்து கொண்டேன். நான் செய்தது தவறு; நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'', என்றார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனையை முன்வைத்து டில்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சமூக விரோதிகள், குற்ற பின்னணி கொண்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்டனர். அரசு வாகனங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
வீடியோ
இந்த சம்பவங்களின் போது, தேசவிரோத கோஷங்களை ஒரு கும்பல் எழுப்பியது. அதில் பெண் ஒருவர், டிவி நேரலை ஒளிபரப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்களை எழுப்பி வசை பாடினார்.
பிரதமருக்கு எதிராக அந்தப் பெண் பேசுகிறார் என்பதால், அவரது அருவருக்கத்தக்க பேச்சின் வீடியோவை எதிர்க்கட்சியினர் தங்களால் முடிந்தவரை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
கேட்கவே நா கூசும் வகையிலும், அச்சில் ஏற்ற முடியாதபடியும் இருந்த அவரது வசை, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் குறிப்பிட்ட அந்தப் பெண் உ.பி., மாநிலம் நொய்டாவில் ஒரு சலூனில் வேலை பார்ப்பவர் என்றும், பெயர் ருச்சிதா சிங், 25, என்றும் தெரியவந்தது. தான் பேசிய வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து உஷாரான அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மூன்று நாட்களாக தலைமறைவாகி விட்டனர்.
மன்னித்து விடுங்கள்
அந்தப் பெண் பேசிய, அருவருக்கத்தக்க, சட்டவிரோத பேச்சுக்காக நொய்டா போலீசார் மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பின்னர் டில்லி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நொய்டாவில் பதுங்கியிருந்த அந்தப் பெண்ணை போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். வீடியோவில் அந்த பெண் கூறியதாவது: போராட்டத்தின்போது சிலரின் தூண்டுதலுக்கு ஆளாகி, பிரதமருக்கு எதிராகப் பல மோசமான கருத்துகளைக் கூறினேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத செயல். நான் பல மோசமான விஷயங்களைப் பேசிவிட்டேன்
இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறு. நான் ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. என்னால் என்னையே பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.
இவ்வாறு வாய் கொழுப்பில் பேசிய பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.
@block_Y@
நாட்டுக்காக பணியாற்றும் தலைவர்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அவர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று வாய்க்கொழுப்பில் பேசிய அந்தப் பெண் இப்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீதான கடும் நடவடிக்கையே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்கும்.
பிரதமருக்கு எதிராக பொய்களை பரப்புவதும், அவதூறு வீடியோக்கள் வெளியிடுவதும் நமக்கு நிறைய நல்ல உறவுகள் கிடைக்கக்கூடும் என்று சிலர் இத்தகைய வேலையை செய்கின்றனர். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. மற்ற இளைஞர்கள் பிரதமர் மோடி மீதான தங்கள் வெறுப்பை மாற்றிக்கொள்ளட்டும். block_Y
@block_P@
தன் மீது அவதூறு பரப்பினாலும் பெருந்தன்மையுடன் பிரதமர் மோடி மன்னித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், '' டில்லி ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாத மாணவர்கள் என்னையும், என் தாயையும் அவதுாறாக பேசினர்.
இளமையில் தவறு செய்வது இயல்பு. அதே பருவத்தில் தான், தவறை திருத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். இந்த இளைஞர்களை நல்வழிப் படுத்த வேண்டியது நம் கடமை. அவர்களை தண்டிப்பதோ, நீதிமன்றத்திற்கு இழுப்பதோ சரியான தீர்வாக இருக்காது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
block_P
@block_G@
நொய்டா போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அந்த பெண்ணின் வயது 25 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மன்னிப்பு கோரும் வீடியோவில் அந்த பெண், தனக்கு 15 வயது மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.
மைனர் வயது என்றால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம் என்ற நோக்கத்தில், இவ்வாறு அவர் கூறலாம் என்ற சந்தேகத்தில் அவரது வயது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.block_G
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் பார்த்து ரசிக்கும் மக்கள் அது உச்சிக்கு வரும்போது திட்டி தீர்க்கிறார்கள் அதே போல தான் கடும் உழைப்பும் நாட்டு பற்றும் நிறைந்து காணப்படும் ஒருவர் உச்சியில் இருக்கும்பொழுது திட்டி தீர்க்கிறார்கள்... சூரியனை பார்த்து நாய்கள் குரைத்து கொண்டு தான் இருக்கும் அதனால் நேரம் விடிய போவதில்லை அதனை அழுக்கு என நினைத்து விட்டு விடுவதே மேலானது....
டில்லியின் பெண் காவலர்களுக்குப் பாராட்டுக்கள் வெறும் பன்னிரண்டு மணி நேரத்திற்குள் இவருக்கு பதமாகவும் பக்குவமாகவும் இதமாகவும் ஒரு தாயைப் போல அன்புடனும் சுளுக்கு எடுத்து - - வந்து - - வந்து - - வகுப்பு எடுத்து நல்லவளாகத் திருத்தி விட்டார்கள்
பதினைந்து வயதுதான் ஆகிறதா ஜிங்கிடி? பார்த்தால் அப்படித் தெரியவில்லை அதுசரி தண்டனையில் இருந்து தப்பிக்க நிம்பள் இப்படிச் சொல்லிவிட்டு நிம்பளை வேலைக்கு வைத்திருக்கும் சலூன்காரரை வம்பில் மாட்டிவிடாதே மைனரை வேலைக்கு வைத்திருந்தான் என்று அவன் மேல் போலீசு பாயும்
நீட் தேர்வு எழுத ஏந்த தகுதியும் இலாலாத வெறும் 15 வயதே ஆன ரூச்சிக்கா சிங் தனது சக போராட்டக்காரர்கள் தூண்டு தலால் தான் பிரதமரையும் அவரது தாயாரையும் தரக் குறைவாக விமர்சித்ததாக கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டு கொண்டார் . தன் பேத்தியின் வயதையொத்த வராக ரூச்சிகா இருப்பதால் பிரதமர் அவரை மன்னித்து விட்டதாக கூறி பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். ஆனால் ராகுல் நீட் விஷயத்தில் மாணவர்கள் ஏதோ இவரை அவர்கள் சார்பில் பேச அதிகாரம் கொடுத்ததாக எண்ணி கொண்டு பிரதமர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கேட்காத ஓன்றை கோரிக்கை யாக கூறுகிறார். ராகுல் வெறும் காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் தான் தலைவர். பிரதமர் உள்பட நாட்டில் உள்ள எந்த கட்சியினருக்கோ அல்லது பொது மக்களில் பலருக்கும் கூட அவர் வெறும் நாடாளு மன்ற உறுப்பினர் மட்டுமே. எனவே நம் நாட்டின் பிரதமர் ராகுலின் எந்த விமர்சனம் அல்லது கேள்விகளுககு பதிலளிக்க தேவையே இல்லை.
சரியான கருத்து
மோடிஜி பெருந்தன்மையாக தனது உரையில் கூறுகிறார். சில சமயம் நம் நாக்கை நம் பற்களால் கடித்து விடுகிறோம். ரத்தம் கூட வரும். அதனால் பல்லை பிடுங்கி விடுகிறோமா. அது போல் தான் இவளும் நம்மை சேர்ந்தவள் என்று பேசுகிறார். மோடிஜி அவர்களே இவளை போன்றவர்கள் சொத்தை பற்கள் போன்றவர்கள். அவசியம் பிடுங்கி தான் எறிய வேண்டும்.
சார் சார் சார்
கொலைசெய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் விட்டுவிடமுடியுமா? அதே மாதிரி தான் இதுவும். விடமுடியாது. பத்து வருடம் ஜெயில் தண்டனை கொடுக்கவேண்டும்.
பேச்சு வேறு. கொலை வேறு. Even if her age 18+ , the tem democratic society, which include, the reprsentatives of citizens, Government which is by the citizens of the citizens for the citizens, and finally the citizens should have mercy, trust, accountability, responsibility. In India, there is lot of work needs to be done, so that the Democratic tem should be more perfect so that all citizens have a equal rights to live their lives. She should be forgiven. PM had already given his forgiveness. Any FIR to be filed only of there is Filer/Complaitant. I have no idea, on whos complaint these FIRs been filed.
பத்து வருடம் பத்தாது ஆயுள் தண்டனைகொடுக்க வேண்டும்
மதவாத குண்டர்கள் இவரைப்போல பல இளைஞ்சர்களை மிரட்டி பின் இவர்களீல் தங்களை தலைவரின் காலடியில் கொண்டு போய் விழா வைக்கும் இந்துமதவாத காட்டுமிராண்டித்தனங்கள் இனியும் ஓளியவில்லை . போக நாடெங்கும் தலைவிரித்தாடுகிறது
ஆமாம் தம்பி . இங்கே ஹிந்து மதவாதம் அதிகமா போச்சு . நீ வேற நாட்டுக்கு போய்விடு .
முஸல்மான் அல்லது பாவாடை சாமி என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம்
இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர் நானா நன்னய செய்து விடல் ......
இத்தகைய பிள்ளைகளை பெற்றவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்.மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்