33 கேள்விகள் கேட்கப்படும்; இன்று முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஆக.,1(இன்று) முதல் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வீடு வீடாக நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபடும் களப்பணியாளர்கள் 33 கேள்விகள் கேட்பார்கள்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கான பணி ஜூலை 17 முதல் 31 வரை சுய கணக்கெடுப்பு முறையில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலம் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணியானது ஆக.,1 (இன்று) முதல் 30 வரை வரை நடக்கிறது.
மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், வலுவான கொள்கைகளை உருவாக்கவும், திட்டமிடுதலுக்கும் இந்த துல்லியமான தரவு சேகரிப்பு மிக முக்கியமானது.
இந்த கணக்கெடுப்பில் வீடுகளின் நிலை, குடிநீர், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிப்பிடம், கணினி போன்ற வசதிகளுடன் வீட்டின் உரிமை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, உட்கொள்ளும் உணவு, வாகனங்கள், அலைபேசி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும்.
கணக்கெடுப்பாளர்கள் அலைபேசி செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். அதே சமயத்தில் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்படும். அனைத்து பொதுமக்களும் வீடுகள்பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியின் போது கணக்கெடுப்பாளர்களின் கேள்விகளுக்கு சரியான விவரங்களை வழங்கி தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
வெப் சைட்டில் வயது, பால் ஆகிய விவரங்கள் கேட்கப்படவில்லை
தாய் நாடு எதுன்னு கேட்கவும்?
தர்மபுரி பாட்டாளி
என்னாது புரியலை .. தர்மபுரி பாட்டாளி தற்குறி வீடு எங்கன்னு கேட்கணுமா ..அல்லது தாய் நாடு எதுன்னு கேட்கனுமா
ரொம்ப முக்கியமான, தேவையான data, அதில் ஈடுபட்டியிருக்கும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள்மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்