13 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் உளுந்துார்பேட்டை அருகே கைது
உளுந்தூர்பேட்டை, ஆக. 3
உளுந்தூர்பேட்டை அருகே 13 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணியளவில் எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் திருக்கோவிலுார் அடுத்த குடமுருட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஐயப்பன், 28; என்பதும், அவரது பையை சோதனை செய்தபோது 13 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
மதுவிலக்கு போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து ஐயப்பனை எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து ஐயப்பனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இதே நாளில் அன்று
-
'இவ்வளவு நெருக்கடியா?'
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் சிதைய பாகிஸ்தானே காரணம்: இந்திய துாதர் குற்றச்சாட்டு
-
'இப்படி முறுக்கிட்டு நிற்கணுமா?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதை கண்காணிக்க வந்தாச்சு 'ஆப்'பு : மாநகராட்சியில் 'டிமிக்கி' அலுவலர்களுக்கு கமிஷனர் 'செக்'
Advertisement
Advertisement