அபிஷேக் சர்மா விளாசல்: 91 பந்தில்... 233 ரன்

அமிர்தசரஸ்: உள்ளூர் ஒருநாள் போட்டியில் அசத்திய அபிஷேக் சர்மா, 91 பந்தில் 233 ரன் குவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் நடந்தது. அமிர்தசரசில் நடந்த போட்டியில் டார்ன் டாரன், அமிர்தசரஸ் அணிகள் மோதின. அமிர்தசரஸ் அணிக்கு சூப்பர் துவக்கம் தந்த அபிஷேக் சர்மா, 91 பந்தில், 25 சிக்சர், 15 பவுண்டரி உட்பட 233 ரன் ('ஸ்டிரைக் ரேட்' 256.04) குவித்தார். அபே சவுத்ரி (93), அபினவ் சர்மா (51) அரைசதம் கடந்து கைகொடுக்க, அமிர்தசரஸ் அணி 50 ஓவரில் 533/8 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய டார்ன் டாரன் அணி 50 ஓவரில் 313/8 ரன் மட்டும் எடுத்து, 220 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அர்ஷ்திப் சிங் சதம் (108) விளாசினார். மன்பிரீத் சிங் சாந்து 62 ரன் எடுத்தார். இப்போட்டியில் 9 ஓவர் வீசிய அபிஷேக், 71 ரன் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement