அள்ளாத குப்பையில் அணையாத தீ
போக்குவரத்து இடையூறு
திருப்பூர், 32வது வார்டு, டி.பி.ஏ. காலனியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
- சுப்பிரமணி, டி.பி.ஏ. காலனி.
நாய்கள் தொல்லை
திருப்பூர், கே.செட்டிபாளையம், பாலாஜி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
- சண்முகம், பாலாஜி நகர். (படம் உண்டு)
வீணாகும் குடிநீர்
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, பி.என். ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதுடன், சாலையும் சேதமடைகிறது.
- லோகநாதன், பி.என். ரோடு. (படம் உண்டு)
குழாய் உடைப்பு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, 2வது ரயில்வே கேட் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)
மின் கம்பம் சேதம்
திருப்பூர், 17வது வார்டு, திருவள்ளுவர் நகர் கிழக்கு முதல் வீதியில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது.
- ரஞ்சித், திருவள்ளுவர் நகர்.(படம் உண்டு)
கழிவுநீர் தேக்கம்
திருப்பூர், 20வது வார்டு, எம்.ஜி.ஆர். நகர் 2வது வீதியில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.
- ரஞ்சித்குமார், எம்.ஜி.ஆர். நகர். (படம் உண்டு)
குப்பைக் குவியல்
திருப்பூர், காலேஜ் ரோடு, இ.ஆர்.பி. லே--அவுட், பி.எஸ்.என்.எல். குடியிருப்பு அருகே குப்பை குவிந்து கிடக்கிறது.
- தண்டபாணி, இ.ஆர்.பி. லே--அவுட். (படம் உண்டு)
குப்பை எரிப்பு
கருப்பகவுண்டம்பாளையத்தில் குப்பைக்கு தீ வைப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறுகின்றனர்.
- மணிவண்ணன், கருப்பகவுண்டம்பாளையம். (படம் உண்டு)
மூடப்படாத குழி
திருப்பூர், குமாரசாமி லே--அவுட் முதல் வீதி, முத்து நகர் எக்ஸ்டென்ஷனில் சாக்கடைப் பணிக்காக தோண்டிய குழி மூடப்படாமல் உள்ளது.
- மோகன், முத்து நகர். (படம் உண்டு)
திருப்பூர், காதர்பேட்டை, ஆசாத் வீதியில் கேபிள் பதிக்க தோண்டிய குழி மூடப்படாமல் இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
- ஆனந்தன், ஆசாத் வீதி. (படம் உண்டு)
ஆபத்தான தொட்டி
காமநாயக்கன்பாளையம், ஸ்கூல் வீதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விரிசலுடன் ஆபத்தான நிலையில் உள்ளது.
- பாலுஆனந்த், காமநாயக்கன்பாளையம். (படம் உண்டு)
சீராகுமா சாலை?
கரைப்புதுார், மீனாம்பாறை, கோவில் வீதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
- செல்வராஜ், மீனாம்பாறை. (படம் உண்டு)
திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் - பாங்க் காலனி - பெரிய தோட்டம் இடையே சாலை அமைக்க வேண்டும். தற்போதுள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
- முருகன், பாங்க் காலனி. (படம் உண்டு)
மேலும்
-
சகோதரர்கள் வெட்டி கொலை:புதுச்சத்திரம் அருகே பயங்கரம்
-
‘மாஞ்சா’ காற்றாடி பறக்க விட்டோர் கைது
-
‘பிபா’ கால்பந்து உத்திகளை விளக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
-
போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் பகுதிக்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
திருட்டை தடுத்த இருவர் மீது தாக்குதல்
-
பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தவர்களின் சொத்துக்களை முடக்குகிறது அமலாக்கத்துறை