சகோதரர்கள் வெட்டி கொலை:புதுச்சத்திரம் அருகே பயங்கரம்
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அருகே நிலத்தகராறு காரணமாக, இருவர் வெட்டி படுகொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பால் வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர்கள் அண்ணாமலை மகன் பாலகிருஷ்ணன், 45; அரசு பஸ் டிரைவர். ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன், 37; விவசாயி. இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் கனகராஜ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் உள்ளிட்ட சிலர், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் இருவரையும் கத்தியால் வெட்டி தப்பியோடினர். இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அருகிலருந்தவர்கள் மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை செய்யப்பட்ட இருவரும் திருமணமானவர்கள். இருவருக்கும் தலா ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பாலகிருஷ்ணன் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இருவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம், பால்வாத்துண்ணான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் கொலைகள்
புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேட்டைச் சேர்ந்த சுரேஷ் கடந்த மே மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 16 ம் தேதி வாண்டியாம்பள்ளத்தைச் சேர்ந்த கவியரசன் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந் நிலையில் பால்வாத்துண்ணான் பகுதியில் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சத்திரம் பகுதியில் தொடரும் கொலைகளை கட்டுப்படுத்த போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் , கொலை வழக்கு , நிரூபிக்கப்பட்டால், கொலை செய்தவருக்கும் அந்தக் கொலையோடு தொடர்பு உள்ளவர்களுக்கும், எந்த அசையா சொத்திலும், பங்கும் உரிமையும் கிடையாது , என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.மேலும்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
-
கலை திருவிழா போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
-
புதர்களால் மறைந்து வரும் சாலை வாகனங்களை இயக்குவதில் சிரமம்