பால் வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

வடமதுரை: வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டி சதீஸ்குமார் 19. பால் வியாபாரி. பால் வழங்கும் மாட்டு உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக நேற்று மதியம் வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்தார். பணத்தை தனது டூவீலர் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு திண்டுக்கல் ரோட்டில் இருக்கும் ஒரு ஓட்டல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பினார். குறுகிய நேரத்திற்குள் இவரை பின் தொடர்ந்து முககவசம் அணிந்தபடி டூவீலரில் வந்த இரு மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement