புதர்களால் மறைந்து வரும் சாலை வாகனங்களை இயக்குவதில் சிரமம்

பந்தலுார்: பந்தலுார் அருகே சேலக்குன்னா சாலையை புதர்கள் சூழ்ந்து வருவதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பந்தலுார் அருகே சேலக்குன்னா அரசு ஆரம்பப்பள்ளி அருகில் இருந்து பொன்னம்மா பள்ளம் செல்வதற்கான சாலையை நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. சாலையில் இரண்டு பகுதிகளிலும் புதர்கள் சூழ்ந்து, சாலையை தெரியாத நிலையில் காணப்படுகிறது.

இந்த பகுதியில் மாலை, 6:00 மணிக்கு மேல் யானைகள் வந்து செல்லும் நிலையில், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள், மாணவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை தொடர்கிறது. சாலையின் இரண்டு பக்க புதர்களையும் வெட்டி அகற்ற, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், தீர்வு காணப்படவில்லை.

எனவே, வன விலங்குகளால் மக்கள் பாதிக்கும் முன்பாக, புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement