கலை திருவிழா போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மஞ்சூர்: மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட கலை பண்பாடு துறை சார்பில், மாவட்ட அளவில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடையே கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் போட்டிகளில் பங்கேற்றனர். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி குரல் இசை போட்டியிலும், ஓவியப் போட்டியில் மாணவி கீர்த்தனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
எட்டாம் வகுப்பு மாணவி சிவனிகா குரல் இசை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார். மாணவிகள் ஹரிணி , கனிஷ்கா , லத்திகா , ரஞ்சனி ஆகியோர் சான்றிதழ்களை பெற்றனர்.
போட்டிகளில் , வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் பாபி தலைமை வகித்து, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கலை ஆசிரியர் சகாய தாஸ், இசை ஆசிரியர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்