ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'

விழுப்புரம்: முதியவரிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்து, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த கப்பூரை சேர்ந்தவர் சிவாஜி, 60; இவர் கடந்த ஜூன் மாதம் விழுப்புரம் நேரு வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார்.

அங்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தபோது இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத 40 வயது நபர், தனக்கு நேரமாகிறது என்று கூறி ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்துள்ளார். பின், சிவாஜி ஏ.டி.எம்., கார்டை மர்ம நபர் எடுத்து சென்று வேறு ஏ.டி.எம்., மையத்தில் 50 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.

விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement