மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மோசடி: துணை கலெக்டர் கைது
மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பூஜைக்கான அறக்கட்டளையின், 60 கோடி ரூபாய் இடத்தை அபகரித்த வழக்கில்,ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (துணை கலெக்டர்) அன்பழகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்ய புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜா - துரைராணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்ததாக முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் விஏஓ அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன், தங்கள் பெயருக்கு பட்டா மாற்றிய ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி உட்பட, 19 பேர் மீது, கோவில் இணைகமிஷனர் செல்லத்துரை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும் நிலையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து பட்டா பெற்றததாக புதுக்கோட்டை கறம்பக்குடி ராஜ்குமாரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு 'மூளையாக' செயல்பட்ட இளையராஜாவை நேற்று, பெங்களூருவில் தனிப்படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் துணை கலெக்டர் அன்பழகனை போலீசார் இன்று [ஆகஸ்ட் 04 ] கைது செய்தனர். இவர் தற்போது ராமநாதபுரம் கலெக்டரின் சிறப்பு நேர்முக உதவியாளராக (நிலம்) பணியாற்றி வருகிறார். மோசடி நடந்தபோது, அன்பழகன் மதுரையில் தாசில்தாராக பணியாற்றியுள்ளார்.
துணை கலெக்டர் பதவியை பயன்படுத்தி மோசடி செய்தவனை பணிநீக்கம் செய்ய வேண்டும். சார்பதிவாளரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
மாட்டிக்கொண்ட. துணை கலெக்டர் அன்பழகனை மீண்டும் தாசில்தாராக பதவியிறக்கம் செய்ய வேண்டும். துணை கலெக்டரான பின் செய்த ஊழல்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்க ..
அரசு பதவியை நீக்கி அவர் பணி செய்த அலௌவலம் வாசலில் அவரை பிச்சையெடுக்க விட வேண்டும்.
நல்ல நடவடிக்கை ...ஓருவரையும் விடாதீர்கள் அப்பொழுதுதான்
மற்றவர்கள்.பயப்படுவார்கள்.
திமுக அண்ணா திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு மொத்தம் ரத்து செய்து, உண்மையான ஆவணங்கள் மூலம் மறு பதிவு 100 ஸ்டாம்ப் பேப்பரில் பதிந்து ஆவண படுத்த வேண்டும். போதிய உண்மை இணைப்பு ஆவணம், சட்ட பூர்வ பண பரிவர்த்தனை இல்லாத பதிவுகள் நிலுவையில் வைத்து, உரிமை கோராத சொத்துகள் நூலகம் போன்ற பொது உபயோகத்திற்கு மாற்ற வேண்டும். அடுத்த கட்டம் வெளி மாநில, நாட்டு சொத்துகள் மறு சீராய்வு. அப்போது தான் திராவிடர் பண பலம் குறையும். தேடிய செல்வம் அல்ல. அபகரிக்க பட்டது. ஆகவே நடைமுறை படுத்த வேண்டும்.
சபாஷ் சரியான நடவடிக்கை
இது போன்று, தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் அதன் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள், எவ்வளவு பட்டா மாறுதல் மூலம் மோசடியாக கை மாறி உள்ளது என்பதை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும்
-
மேல்மலையனுார் கோவில் உண்டியலில் கைவரிசை
-
கார் - ஆம்னி பஸ் மோதல்; சிறுவன் உட்பட 3 பேர் பலி
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த... எதிர்பார்ப்பு: திருப்பத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் பாதிப்பு
-
தாய் கண் முன்னே மகளிடம் சில்மிஷம் செய்தவர் கைது
-
காரை எரித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி
-
தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்