அடகு ஆவணங்களுடன் மாயமான கடை ஊழியர்

வடமதுரை, ஆக.5-

திண்டுக்கல் மகாலட்சுமி நகரை சேர்ந்த சங்கர் கணேஷ் 31, தாமரைப்பாடியில் தங்க நகை அடகுக்கடை நடத்துகிறார். இங்கு சிவகங்கை மாவட்டம் அரியாண்டிபட்டி தம்பிதுரை 24, ஆறு வருடங்களாக பணிபுரிந்தார்.

ஜூலை 3ல் தம்பிதுரை கடையின் வரவு, செலவு பதிவேடுகள், முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு கடையை பூட்டி சாவியை அருகில் உள்ள வீட்டில் தந்து விட்டு மாயமானார்.

உரிமையாளர் சங்கர் கணேஷ் கடையை ஆய்வு செய்த போது முக்கிய ஆவணங்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியானார். மாயமான ஊழியர் தம்பிதுரையை வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் தேடி வருகிறார்.

Advertisement