பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
கண்டாச்சிபுரம்: புரவடை – ஆயந்தூர் ரோட்டில் ஆபத்தான வளைவில் உள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட புரவடை ஊராட்சியிலிருந்து ஆயந்துார் செல்லும் ரோட்டில் சில இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இதில் ஓடை பாலம் அருகே உள்ள ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் இன்றி சிறு பாலம் உள்ளது.
இந்த சாலை குறித்து உள்ளூர் வாசிகளுக்கு தெரிந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே ஆபத்தான இந்த பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேல்மலையனுார் கோவில் உண்டியலில் கைவரிசை
-
கார் - ஆம்னி பஸ் மோதல்; சிறுவன் உட்பட 3 பேர் பலி
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த... எதிர்பார்ப்பு: திருப்பத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் பாதிப்பு
-
தாய் கண் முன்னே மகளிடம் சில்மிஷம் செய்தவர் கைது
-
காரை எரித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி
-
தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement