குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த... எதிர்பார்ப்பு: திருப்பத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் பாதிப்பு
திருப்புத்துார்: திருப்புத்தூரில் காவிரி நீர் பற்றாக்குறையால் எதிர்பார்க்கப்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்றுத் திட்டமாக கடந்த 11 ஆண்டுகளாக முடங்கியுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்புத்தூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக உச்சநீதிமன்ற உத்தரவுபடி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, பேரூராட்சியுடன் இணைந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 2012ல் கொண்டு வந்தது. தனியார் நிறுவனமான வாட்டர் இந்தியா பி. லிட்.,மூலம் பராமரிக்கப்பட்ட இந்த திட்டத்தை இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படுத்தினர்.
தினமும் வீட்டிற்கு ஒரு குடம் வீதம் இலவசமாக வழங்கி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பேரூராட்சி அத்திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். ஆனால் நிர்வாக, தொழில்நுட்ப காரணங்களை கூறி பேரூராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் தட்டிக்கழித்து விட்டது. இதனால் 2016 க்கு பின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. மேலும் திருப்புத்தூர் நகருக்கு குடிநீர் விநியோகமாகும் காவிரி குடிநீர் திட்டத்திற்கான நீர் ஆதாரமான காவிரியாற்றிலும் நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால் அடுத்த மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் குடிநீர் திட்டத்திற்கு மாற்றாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி குடிநீர் விநியோகத்தைத் துவக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சிகளில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என்பதை காட்டும் விதமாகவே இக்குடிநீர் திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் ஏற்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
எனவே ரூ.12 கோடி மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிவகங்கை ரோடு உரக்கிடங்கில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அட்டக்குளத்தில் கழிவுநீர் வடிகட்டும் உபகரணம் ஆகியவற்றை செயல்படுத்தி, கழிவுநீரையும் சுத்திகரிப்பு செய்து பாசன நீராக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
-
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு
-
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ஆனால்... மார்கோ ரூபியோ சொல்வது இதுதான்...!
-
ஏமன் கடற்கரை அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்; இந்திய மாலுமிகள் 13 பேர் பத்திரமாக மீட்பு
-
'கல்குவாரிகள் கைகொடுக்கும் குடிநீர் பற்றாக்குறை வராது'