தாய் கண் முன்னே மகளிடம் சில்மிஷம் செய்தவர் கைது
ஆரணி: ஆரணி அருகே, தாயின் கண் முன்னே, அவரது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அபினேஷ், 22, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 42 வயது பெண்ணும், அவரது, 19 வயது மகளும், நேற்று முன்தினம் இரவு, ஆரணியிலுள்ள தியேட்டரில், சினிமா பார்த்து விட்டு இரவு, 10:00 மணிக்கு டூ - வீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
ஆரணியைச் சேர்ந்தவர் அபினேஷ், 22. இவர், ஆகாரம் கூட்ரோடு அருகே, அப்பெண்ணின் மொபட்டை மடக்கி தகராறில் ஈடுபட்டு, கன்னத்தில் 'பளார்' என அறைந்தார். பின் அவரின், 19 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தினர், அபினேஷை சரமாரியாக தாக்கி, ஆரணி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அபினேஷ், கஞ்சா போதையில் இருந்ததும், அவர், ஆரணியில் பைக்கை எரித்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வந்துள்ளதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும்
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
-
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு
-
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ஆனால்... மார்கோ ரூபியோ சொல்வது இதுதான்...!
-
ஏமன் கடற்கரை அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்; இந்திய மாலுமிகள் 13 பேர் பத்திரமாக மீட்பு
-
'கல்குவாரிகள் கைகொடுக்கும் குடிநீர் பற்றாக்குறை வராது'