நுகர்பொருள் வாணிப கழகஊழியர் காத்திருப்பு போராட்டம்   

படம் உண்டு சிவகங்கை, ஆக.5– நுகர்பொருள் வாணிப கழக பருவ கால பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் கிளார்க், உதவியாளர், காவலர் என தமிழக அளவில் 6 ஆயிரம் பருவ கால பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சிவகங்கையில் 367 பேர் உள்ளனர். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். அடிப்படை சம்பளத்தை ரூ.29 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தின் முன் பணிகளை புறக்கணித்து நேற்று ஒரு நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு சார்பில் சுரேஷ்குமார், கருணாகரன், ரணதிவே ஆகியோர் தலைமை வகித்தனர். அழகர்சாமி, வசந்தகுமாரி, வித்யாதேவி, ராமலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை மண்டல மேலாளர் நத்தர்ஷாவிடம் வழங்கினர். ///

 

Advertisement