கார் விபத்தில் இறந்த இளம்பெண் பலாத்கார முயற்சியில் கொலை?
மாண்டியா: கார் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளம்பெண், பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மாண்டியாவின் ஹொன்னேமடு கிராமத்தை சேர்ந்தவர் நவீனா, 19. மாண்டியா டவுனில் உள்ள பழக்கடையில் வேலை செய்தார். பி.ஜி.,யில் தங்கி இருந்தார். கடந்த, 2ம் தேதி தோழி அஸ்வினி, ஆண் நண்பர்கள் விஷ்ணு, சிவகுமார் ஆகியோருடன், கொம்மரஹள்ளி கிராம பகுதியில் காரில் சென்றார். கார் மின்கம்பத்தில் மோதியதில் நவீனா இறந்தார். போலீசார் விபத்து என வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் நவீனாவின் பெற்றோர் நேற்று போலீசில் அளித்த புகாரில், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். நவீனா இறந்ததை மேலோட்டமாக பார்க்கும் போது விபத்து போன்று இருந்தாலும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
'பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நவீனாவை அழைத்து சென்ற விஷ்ணு, சிவகுமார் அவரை பலாத்காரம் செய்ய முயன்று இருந்துள்ளனர். இதற்கு அஸ்வினியும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
'பலாத்கார முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நவீனாவை கொலை செய்து, போலீசில் இருந்து தப்பிக்க, காரை மின் கம்பத்தில் மோதி விபத்து போன்று சித்தரித்து இருக்கின்றனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்வினி, விஷ்ணு, சிவகுமாரிடம் மாண்டியா ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு நடைமுறை மாற்றம் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 4.8.2026)
-
இனி, கோட்ட அலுவலகங்களில் மத்திய ஜி.எஸ்.டி., எண் பெறலாம் தாமதமின்றி அனுமதி கிடைக்கும்
-
ரயில்வே சரக்கு போக்குவரத்து ஜூலையில் 9 சதவீதம் வளர்ச்சி
-
புதிய மாம்பழ தொழில் பூங்காக்கள் பலன் தராது என்கிறது கூட்டமைப்பு
-
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சந்திக்கும் 9 வழக்குகள்