10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் முதல் 12 முதியோர் இல்லங்கள் வரை… தமிழக பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் என்னென்ன?

45


நமது சிறப்பு நிருபர்




நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:

* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு

* மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும்.

* மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

* பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தமிழகத்தில் 12 மாவட்டங்களில் தலா 1 வீதம் 12 முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்; இதற்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு.

* அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 100% மானியத்தில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். இதற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு

* ஏஐ பல்கலை, சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், செமிகண்டக்டர் சோதனை ஆய்வகம் ஆகியவற்றுடன் கூடிய நாட்டின் முதலாவது பிரத்யேக ஏ.ஐ., நகரம் அறிவகம் என்ற பெயரில் அமைக்கப்படும்; பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க, திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும். ரூ.10 கோடி ஒதுக்கீடு


* சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு

* புதிய மாநில வீட்டுவசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; ரூ.3500 கோடியில் செயல்படுத்தப்படும்.

* வெற்றி மடிக்கணினித் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

* அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* 2031ம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்கப்படும்.

* 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி; பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி திறன் பயிற்சித் திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

* ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் வெற்றி முனைவோர் திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு

* அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க மண்ணின் மகள் திட்டத்துக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

* மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்.

* மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்களுக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு


* கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு

* புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* நிபுணத்துவ டாக்டர்களை கொண்ட 5 மையங்கள் அமைக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

* ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு

* தொழில் வளர்சிக்கான புதிய உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

* ஹஜ் பயண மானியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* கூவம், அடையாறு ஆறுகள் உலகத்தரத்தில் மறு சீரமைப்பு செய்யப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை, பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்படும்.

* பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க 1058 என்ற இலவச எண் அறிமுகம்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற செயலி உருவாக்கப்படும்.

* தனித்துவமான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகளை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.

* ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாக கொண்டு, 10 ஒலிம்பிக் மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

* ஏஐ தொழில்நுட்பத்துடன் வழிகாட்டி 3.0 அறிமுகம் செய்யப்படும்.

* திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* அனைத்து இ-சேவை மையங்களும் இ சேவை 2.0 ஆக மேம்படுத்தப்படும்.

* வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு


* காவிரி- வைகை- குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

* பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு மற்றும் தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

* நதிகள் மீட்பு திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

* காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சாத்தியக்கூறு ஆய்வு செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம்; அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிப்பு. இத்திட்டத்துக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு

* ரூ.1,375 கோடி மதிப்பீட்டில் உலகத்தர நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்.

* வடபழனி - போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும்; சென்னைக்கு 3 புதிய மெட்ரோ ரயில் தடங்கள் பரிந்துரை செய்யப்படும்.

* ஆன்மிகப் பயணிகளின் வசதிக்காக, திருக்கடையூர், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் நிறுவப்படும்; இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அரசு வாட்ஸ்ஆப் Chatbot சேவைகள் தற்போதைய 76 சேவைகளிலிருந்து 275 சேவைகளாக விரிவுபடுத்தப்படும்.


பிரத்யேக வீடியோ!

தவெக அரசின் முதல் பட்ஜெட்; முக்கிய அம்சங்கள் என்னென்ன?- தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement