துவரையில் முழு மரபணு வரிசைமுறை கண்டுபிடிப்பால் புது ரகங்கள் வர வாய்ப்பு
புதுடில்லி: நாட்டிலேயே முதல்முறையாக, துவரையில் 'டி2டி' என்ற முழுமையான மரபணு வரைபடத்தை, ஐ.சி.ஏ.ஆர்., என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது. இது, நாட்டின் பயிர் மரபணு ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஐ.சி.ஏ.ஆர்., தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் முக்கிய பயறு வகையில் துவரையும் ஒன்றாகும். கடந்த 2011ம் ஆண்டு உருவாக்கிய 'ஆஷா' என்கிற துவரை ரகத்தில், உலகின் முதல் வரைவு மரபணு வரிசைமுறை வெளியிடப்பட்டது.
இந்தியாவில் வரிசைப்படுத்தப்பட்ட முதல் பயிர் மரபணு குறியீடு இதுவாகும். பின், 2017ல் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது முழுமையான டி2டி என்னும் மரபணு வரிசைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, வேளாண் மற்றும் ஊட்டச்சத்து பண்புகளுடன் தொடர்புடைய மரபணுக்களை கண்டறிவதற்கும், பான் ஜீனோம் ஆய்வுகள், மூலக்கூறு இனப்பெருக்கம், மரபணு திருத்தம் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கும் அடிப்படை ஆதாரமாக அமையும்.
இதன் வாயிலாக, பயிர் நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவ ஆராய்ச்சி, புதிய சிகிச்சைகளை கண்டுபிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய, அதிக மகசூல் மற்றும் ஊட்டச்சத்து கொண்ட புதிய துவரை ரகங்களை விரைவாக உருவாக்க முடியும்.
இது, நாட்டின் பருப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு வலுசேர்ப்பதுடன் விவசாயிகளின் வருமான உயர்வு மற்றும் நாட்டின் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும்
-
பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வால்...விரக்தி! :மன உளைச்சலில் உற்பத்தியாளர்கள்
-
நிழற்குடையை மறைத்து த.வெ.க., பேனர்
-
இந்தியர்களின் மருத்துவ தரவுகள் சிங்கப்பூருக்கு கசிந்ததால் அதிர்ச்சி; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு
-
நேர்மையான துாய்மை பணியாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவிப்பு
-
புகார் பெட்டி
-
போலீஸ் செய்திகள்