பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலைய பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு சென்னை, சேலம், கடலுார், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் எப்போது பார்த்தாலும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
பஸ் நிலையதைச் சுற்றிலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இங்கு ஓட்டல் உட்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையான கால்வாய் இன்றி மதில் சுவரையொட்டி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாகவும் மாறி வருகிறது. மேலும் பயங்கர துர்நாற்றமும் வீசுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். எனவே, பஸ் நிலைய பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை முறையாக வெளியேற்றும் வகையில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும்
-
பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வால்...விரக்தி! :மன உளைச்சலில் உற்பத்தியாளர்கள்
-
நிழற்குடையை மறைத்து த.வெ.க., பேனர்
-
இந்தியர்களின் மருத்துவ தரவுகள் சிங்கப்பூருக்கு கசிந்ததால் அதிர்ச்சி; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு
-
நேர்மையான துாய்மை பணியாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவிப்பு
-
புகார் பெட்டி
-
போலீஸ் செய்திகள்