சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

செஞ்சி: சிங்கவரம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் பராசக்தி தண்டபாணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் மணிமாறன், உதயகுமார் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஊராட்சி செயலாளர் நீலமேகம் தீர்மானம் வாசித்தார். அதில், 16வது மத்திய நிதி குழுவிகள் திட்டத்தில் அனைத்து வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையம் என கிராமத்தில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

ஏ.பி.டி.ஓ., பத்மாவதி, துணை தலைவர் சதீஷ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement