விளையாட்டு நகராக மதுரை மாற்றப்படுமா: மதுரை வராத அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
மதுரை:விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா பதவியேற்ற பின் சென்னை உட்பட பிற மாவட்டங்களில் கவனம் செலுத்தும் நிலையில் மதுரையை கண்டுகொள்ளவில்லை.
மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் தடகள, குழு விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் மாணவர்கள் வெற்றி வாகை சூடிவருகின்றனர். அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பார்வை மதுரை மீது பட்டால் மட்டுமே விளையாட்டு நகராக மதுரை மாறும் என்கின்றனர் தமிழ்நாடு அனைத்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தலைவர் குமார், செயலாளர் கண்ணன்.
அவர்கள் கூறியதாவது:
இதுவரையில் மதுரையில் வென்ற அரசியல்வாதிகளும் மதுரையை புரிந்து தேவையை பூர்த்தி செய்யவில்லை. சிலர் செய்யவும் விடவில்லை.
புதிய அரசு பதவி ஏற்று இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு வீரர் ஆதவ் அர்ஜுனா மதுரைக்கு வரவில்லை. அவரது சமீபத்திய அறிவிப்புகளில் சென்னை, கோவை, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டங்களே இடம்பெற்றுள்ளன. தென்தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 60 சதவீதத்திற்கு மேல் மத்திய, மாநில துறை நிறுவனங்களின் விளையாட்டு பிரிவு வேலை வாய்ப்புகளில் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் விளையாட்டில் சிறந்த பயிற்சி, வேலைவாய்ப்பு பெறுவதற்காக சென்னையை மட்டுமே நம்பியுள்ளனர்.
மதுரையில் விளையாட்டு நகரம் உருவாக்க வேண்டும். மதுரை சூர்யாநகருக்கு எதிரில் அண்ணா பல்கலைக்காக 40 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அப்பல்கலை மதுரை காமராஜ் பல்கலை அருகே சென்று விட்டது. இந்த 40 ஏக்கர் இடத்தை விளையாட்டு நகரம் அமைக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் மதுரையை சுற்றியுள்ள 10 தென்மாவட்ட வீரர், வீராங்கனைகள் எளிதாக இங்கு வந்து தங்கி பயிற்சி பெறமுடியும்.
மதுரையை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமா படங்கள் மதுரையை வன்முறை நகராகவும் கலவர மதுரையாகவும் சாப்பாட்டு நகரமாகவும் காட்டுகிறது. மதுரை மற்றும் தென்மாவட்ட வீரர், வீராங்கனைகளின் ரத்தத்தில் இயல்பாகவே விளையாட்டு ஆர்வமும் வேகமும் உள்ளதால் மதுரையின் முகத்தை விளையாட்டு முகமாக மாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்றனர்.
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்