பெண்ணாடம் கோவிலில் 50 ஆண்டிற்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா கொடியேற்றம்
பெண்ணாடம்:பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதானதால் ஆடிப்பூர் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. தற்போது, மூலவர், அம்மன், விநாயகர் ஆகிய மூன்று தேர்கள் புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் சித்திரை தேர் திருவிழா நடந்தது.
நிறுத்தப்பட்ட ஆடிப்பூர தேர் திருவிழா வரும் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து தாயார் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியபொடி, இளநீர் ஆகியவைகளால் அபிேஷகம், கோ பூஜையை தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூர உற்சவத்தையொட்டி தினசரி அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 13ம் தேதி காலை 9:00 மணியளவில் அழகிய காதலி அம்மன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம்தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைகிறது.
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்