போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
தஞ்சாவூர்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியிடம் போலீஸ் விசாரணையின்போது ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, 'டபுள் மீனிங்கில் எதுவும் பேசவில்லை' என, உதயநிதி பதிலளித்துள்ளார்.
தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, த.வெ.க., மகளிரணி சார்பில், தஞ்சாவூர் கிழக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில், உதயநிதி மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் உதயநிதி கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டார்.
தஞ்சாவூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, விசாரிக்க திட்டமிட்ட நிலையில், தி.மு.க.,வினர் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டதால், செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உதயநிதி அழைத்து செல்லப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், 'இரட்டை அர்த்தத்தில் பேசியது, கூட்ட நிபந்தனை, தனி நபர் மீதான தாக்குதல் பேச்சு' உட்பட ஐந்து முக்கிய கேள்விகள், உதயநிதியிடம் கேட்கப்பட்டன.
அதற்கு, 'தனிநபர் குறித்து நான் எதுவும் பேசவில்லை; இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை' என உதயநிதி பதிலளித்துள்ளார்.
எல்லா கேள்விகளுக்கும், ஒரு சில வார்த்தைகளிலேயே உதயநிதி பதில் அளித்தார். போலீஸ் ஸ்டேஷனில், ஒன்றரை மணி நேரம் உதயநிதி இருந்தாலும், அரை மணி நேரத்தில் விசாரணை முடிந்தது.
விசாரணை குறித்து, போலீசார் கூறுகையில், “உதயநிதி மீதான, இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீதான வழக்கு, தஞ்சாவூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். உதயநிதியிடம், விசாரணையின்போது, ஐந்து கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்கு, உரிய பதில்களை அவர் கூறினார்,” என்றனர்.
வாசகர் கருத்து (10)
PVSR - ,
06 ஆக்,2026 - 09:16 Report Abuse
ஒரு பாரம்பரிய கட்சியின் வாரிசு கைதுக்கு பயந்து ஒரு மணி நேரம் பாத்ரூமில் தஞ்சம் இதைவிட வேறென்ன கேவலம். 0
0
Reply
PVSR - ,
06 ஆக்,2026 - 09:15 Report Abuse
டபுள் மீனிங் என்பதே கிடையாது ஒரே ஒரு மீனிங் தான். உங்கள் நண்பர்கள் எல்லாம் ஓடிப் போய்விட்டதாக சொல்கிறார்களே. 0
0
Reply
theruvasagan - ,
06 ஆக்,2026 - 08:42 Report Abuse
இரட்டை அர்த்தத்தில் நாங்க பேசியதாக சொல்லுவது அபாண்டம். நாங்க எதை பேசினாலும் எப்ப பேசினாலும் ஆபாச அர்த்தம் தவிர்த்து அதிலே வேற இரண்டாவது அர்த்தம் எதுவும் இருக்க வாய்ப்பேயில்லை. 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06 ஆக்,2026 - 07:58 Report Abuse
இதுதான் பிரச்சினை. யார் ஒப்புக் கொள்வார். இதுதான் ஊரறிந்த ரகசியம். ஆனால் காவல்துறை கடமையை செய்கிறது என்ற கூறுவார்கள். நீதிமன்றங்கள் இவர்களுக்கு சாதகமாக ஜாமீன் கொடுத்து விடும். வருடக்கணக்கில் இழுத்தடிப்பார்கள். ஊடகங்களில் ஒரு நாள் டிஆர்பி என்று பார்ப்பார்கள். மக்கள் அடுத்த வேலைக்கு போய் விடுவார்கள். இதில் சில அப்பாவிகள் பாதிக்க படுவார்கள். அவ்வளவுதான். 0
0
Reply
ருத்ரன் - ,
06 ஆக்,2026 - 07:52 Report Abuse
கரெக்ட். டபுள் மீன்னிங் இல்லை தான். அருவருப்பான ஒரே மீன்னிங் மட்டுமே. 0
0
Reply
ஈசன் - ,
06 ஆக்,2026 - 07:50 Report Abuse
அங்கே மட்டும் ..... வரும். என்றால் என்ன அர்த்தம். மிக மிக அருவருப்பான பேச்சு. இவர்கள் கூட்டத்தில் உள்ள கடைநிலை தொண்டன் போல் பேசிவிட்டு அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மழுப்புகிறார். 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
06 ஆக்,2026 - 07:42 Report Abuse
உ நிதி பேசியதோடு நிற்கவில்லை இப்போது இவரோட தாத்தா பேசிய நாடா சமாச்சாரம், அண்ணாதுரை பேசிய மாற்றான் தொட்டது மல்லிகைக்கு மணமுண்டு என்ற இரட்டை அர்த்த வசனமும், அப்பாவின் ஜெ மேடையில் அமர்ந்திருக்க மந்திரிகள் கீழே உட்கார்ந்துகொண்டு எனும் அநாகரீகத்தின் உச்சம் பற்றியும், இவர் பழனிச்சாமியின் பதவி பெறும் சசிகலா கால் சந்தில் என்கிற வார்த்தை பிரயோகமும் அலசப்பட்டு மக்கள் மத்தியில் பெருமளவு இந்த திமுக பற்றி பேசப்பட வைத்துவிட்டது. அப்புறம் இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பேச்சுக்கள் பற்றியும் சொல்லி சொல்லி திமுகவை கழுவி கழுவி ஊற்றுகின்றார்கள். இவர் சுருக்கமாக பதில் சொன்னாலும், மக்கள் மத்தியில் விளக்கமாக அலசப்படுகின்றது இவர்களின் யோக்கியதை 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
06 ஆக்,2026 - 07:37 Report Abuse
இந்த கைதுக்கு பிறகு பெருமாபாலான பெண்களிடம் இவர் பேசியது பற்றி அறிந்துகொண்டவர்கள் திட்டி தீர்க்கின்றார்கள். இதனால் திமுக மீதான வெறுப்பானது பன்மடங்கு எகிறிவிட்டது. இனி திமுக தேறவே தேறாது. கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலை சொல்லி சமாளித்தாலும் உ நிதி மீது பெண்களிடையே மிக மோசமான கருத்தே பதிந்துவிட்டது. விஜய்யின் உறுதிப்பாடு பாராட்டப்படுகின்றது. 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
06 ஆக்,2026 - 07:20 Report Abuse
ஊழல்திலகம் உதை வன்மம் பொங்க நக்கலாக டபுள் மீனிங்கில் பேசியதை உலகமே பார்த்து காறி துப்பினாலும் இவர்களெல்லாம் இப்படி தான் பேசுவார்கள் 0
0
Reply
ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி - Chennai,இந்தியா
06 ஆக்,2026 - 06:56 Report Abuse
டபுள் மீனிங் இல்லைங்கோ . அவருடைய பேச்சு எப்பவுமே எப்படி தான். 0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்
Advertisement
Advertisement