பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு ஆடித்திருவிழா களைகட்டியது
சேலம்: ஆடித்திருவிழாவை ஒட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திரு-விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், ஏராளமான பக்-தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், அம்மனை வழிபட்டனர். பலர் உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விடிய விடிய பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். 2ம் நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டது. பின் அர்ச்-சனை செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
பலர், ஆடு, கோழிகளை பலியிட்டு, வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார், அந்த வழியே வாகனங்கள் செல்லா-தபடி தடுப்பு ஏற்படுத்தினர்.
அதேபோல் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்-தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில், ஏராளமான பக்-தர்கள் பொங்கல் வைத்தனர். பலர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குகையை சேர்ந்த சரவணன், 50, என்பவர் நிலை தடுமாறி குண்டத்தில் விழுந்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கைகள், முதுகில் காயம் ஏற்பட்டதால், அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இன்று வண்டி வேடிக்கை நடக்கிறது.
அதேபோல் சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், கடைவீதி சின்ன மாரியம்மன், நஞ்சம்பட்டி, பொன்னம்மாபேட்டை, அஸ்-தம்பட்டி உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் ஆடி திருவிழா களைகட்டியது.
தேரோட்டத்துக்கு இன்று மின்தடை
அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடித்திருவி-ழாவையொட்டி, இன்று தேரோட்டம் நடக்கிறது.
இதனால் அம்மாபேட்டை, காந்தி மைதானம், திரு.வி.க., சாலை, மாரிமுத்து தெரு, செங்கோடன், அண்ணாமலை கோவில், ஆச்சிமுத்து, எல்லப் பன், பண்டரிநாதன், அருணகிரி தெருக்கள், மேட்டுத்தெரு, வையாபுரி தெரு ஆகிய பகுதி களில், காலை, 7:30 முதல், மாலை, 4:00 மணி வரை பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்படும் என, மின்வாரிய சேலம் கிழக்கு கோட்ட செயற்-பொறியாளர் ஜெயா தெரிவித்துள்ளார்.
தேர் திருவிழா கோலாகலம்
வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவிலில், 8 ஆண்டுக்கு பின் தேர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கடந்த ஜூலை, 17ல் பூச்சாட்-டுதல் விழா நடந்தது. நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.
பலர் உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை உருளுதண்டம், அழகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல், பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து பக்-தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 3:00 மணிக்கு, தம்-மம்பட்டி நெடுஞ்சாலையில் இருந்து தேரை, திரளான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்து வந்தனர். ராஜவீதியில் பவனி வந்து, வைத்தி படையாச்சி தெருவில் மாலை, 6::00 மணிக்கு நிறுத்-தப்பட்டது. இன்றும், நாளையும் தேர் திருவிழா நடக்கிறது.
தீ மிதித்த பக்தர்கள்
தாரமங்கலம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், நேற்று அதி-காலை அம்மன் அழைப்பு விழா நடந்தது. தொடர்ந்து, 4:30க்கு பூசாரி தீ மிதித்து விழாவை தொடங்கிவைத்தார். தொடர்ந்து தீக்-குண்டத்தில் குழந்தைகள், பெண்கள், போலீசார் என, ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து தீ மிதித்தனர். சிலர் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், உடம்பில் வேப்பிலை கட்டியும் தீ மிதித்தனர். பலர் அம்மனுக்கு பொங்கல் வைத்து கோழி, ஆடு-களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. மேலும் பக்தர்கள் கார் மற்றும் விமான அலகு குத்தி, முக்கிய வீதிகள் வழியே கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்