பொக்லைன் ஆப்பரேட்டர் தற்கொலை மனைவி புகாரால் விசாரணை
மேட்டூர்: சங்ககிரி, ஒக்கிலிபட்டி, சென்றாயனுாரை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் மாரியப்பன், 41. மனைவி சுதா, 33. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 7 ஆண்டாக தம்பதியர் மேட்டூர், கோல்-நாயக்கன்பட்டி ஊராட்சி, பொறையூரில் உள்ள, சுதாவின் பெற்றோர் வீட்டில் வசித்தனர்.
மாரியப்பன் அங்கிருந்து கோவையில் இரு ஆண்டாக வேலை செய்தார். சுதா வீடு அருகே தையல் கடை வைத்துள்ளார். கடந்த, 1ல் பொக்லைன் உரிமையாளர், மொபைல் போனில் சுதாவிடம் பேசியுள்ளார். அப்போது, 'மாரியப்பனை இரு நாட்களாக காண-வில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டும் எடுக்க-வில்லை' என கூறியுள்ளார்.பின் சுதா தொடர்பு கொண்டு பேசியபோது, 'ஓனர் விடுப்பு கொடுக்காததால் கஷ்டமாக இருந்தது. அதனால் மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு சென்றுள்ளேன். அங்கிருந்து வீட்டுக்கு வரு-கிறேன்' என கூறியுள்ளார். அன்று மதியம், 3:00 மணிக்கு மாரி-யப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் வீட்டில் இல்லாதபோது, மாரியப்பன், மின்
விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுதா, அவ-ரது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக நேற்று மேட்டூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மாரி-யப்பன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்