இ - சேவை மையங்களில் 'சர்வர்' பிரச்னை நகர் பகுதியில் அரசு சேவை பெறுவதில் சிக்கல்
சேலம்: தமிழ்நாடு அரசு டேக் டிவி கட்டுப்பாடில் கலெக்டர் அலுவ-லகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்-ளாட்சி அலுவலகங்களில் இயங்குபவை, அரசின் இ - சேவை மையங்களாகவும், மற்ற இடங்களில் தனியார் இ - சேவை மையங்களாகவும் செயல்படுகின்றன.
அங்கு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த, 100க்கும் மேற்-பட்ட சேவைகளை ஒருங்கே பெறலாம். உரிய ஆவணங்களுடன், அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால் தேவையான சேவைகள் கிடைக்கும்.சமீப காலமாக, சேலத்தில் தனியார் இ - சேவை மையங்களில், 'சர்வர்' மக்கர் செய்வதால், விரைவான சேவை என்பது கேள்விக்-குறியாகி வருகிறது. அதனால் தாமதமான சேவைகளால் பாதிக்கப்-படுவதாக பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நில ஆவணங்கள் தொடர்பான சேவை கிடைப்பது பெரும்பாடாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டா பெயர் மாற்றம், தனிப்பட்டா, புல எல்லை அளவிடுதல் போன்ற சேவைகள் கிடைப்பதில்லை என கூறுகின்றனர்.
இப்பிரச்னை நகர்புற பகுதிகளில் மட்டும் நீடித்து வருவதாக, தனியார் இ - சேவை மையத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால், இ - சேவை மையத்துக்கு வருவோர், சேவை கிடைக்காத பட்-சத்தில், அதிருப்தியுடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
மேலும் தனியார் இ - சேவை மையத்தினர் கூறுகையில், 'தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, உடனே சர்வர் திறனை மேம்-படுத்தி தர வேண்டும். இல்லையெனில் அரசின் சேவையில் குறைபாடு பெருகுவதை தவிர்க்க முடியாது' என்றனர்.
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்