பைக்கில் இருந்து தவறி விழுந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ரஞ்சித்,51; முன்னாள் அரசு வழக்கறிஞர். இவர், நேற்று முன்தினம் இரவு சூளாங்குறிச்சியில் இருந்து ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். பெருவங்கூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ரஞ்சித்திற்கு படுகாயம் ஏற்பட்டது. உடன் அருகிலிருந்தவர்கள் ரஞ்சித்தை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement