பண்ருட்டியில் இறகுபந்து போட்டி டி.ஐ.ஜி., அருளரசு பரிசு வழங்கல்
பண்ருட்டி: பண்ருட்டி பாட்மிண்டன் கிளப் சார்பில் நடந்த ரோலிங் டிராபி 2026 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஐ.ஜி., அருளரசு பரிசு வழங்கினார்.
பண்ருட்டி திருநகர் பாட்மிண்டன் கிளப் அசோசியேஷன் சார்பில் ரோலிங் டிராபி 2026 இறகுபந்து போட்டி நடந்தது.போட்டியில் சென்னை, கடலுார், புதுச்சேரி, நெய்வேலி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், காரைக்கால், விழுப்புரம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றனர். போட்டியில் சென்னை, கடலுார், பண்ருட்டி மற்றும் நெய்வேலி அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு, முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, பாட்மிண்டன் சங்க செயலாளர் ரவி தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் ரமேஷ் வரவேற்றனர். ஜாகீர்உசேன், மோகனகிருஷ்ணன், அருள், செந்தில் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்தார்.
மேலும்
-
மேம்பாலத்தில் இருந்து விழுந்த 'குடி'மகன் சாவு
-
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
-
ரயில்வே ஸ்டேஷன் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்
-
பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு ஆடித்திருவிழா களைகட்டியது
-
பொக்லைன் ஆப்பரேட்டர் தற்கொலை மனைவி புகாரால் விசாரணை
-
இ - சேவை மையங்களில் 'சர்வர்' பிரச்னை நகர் பகுதியில் அரசு சேவை பெறுவதில் சிக்கல்