ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை வரும் 14 ம் தேதி வரை நீட்டிப்பு
கடலுார், ஆக. 7–
அரசு ஐ.டி.ஐ.,களில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 14ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், ஐ.டி.ஐ,.களில் நேரடி சேர்க்கை மேற்கொள்ளும் கடைசி நாள் இம் மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விருப்பத் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயன் பெறலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விபரங்களை https://skilltraining.tn.gov.in/detitiadm/login என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்பழகுநர் பயிற்சி, உயர்கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உள்ளன. மேலும், விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு ஐ.டி.ஐ.,கள் அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை, தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்