பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ 4 பேர் காயம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மினி டெம்போ மோதி ஆட்டோ சாலையோர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 30; ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசனை, 31; நேற்று மதியம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். உடன், ஏழுமலை, 33; ஜெய்சங்கர், 33; சென்றனர். 2.30 மணியளவில் ஏ.புத்துார் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த மினி டெம்போ ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், அருண்ராஜ், கண்ணதாசன், ஏழுமலை, ஜெய்சங்கர் ஆகியோர் காயமடைந்தனர். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வால்...விரக்தி! :மன உளைச்சலில் உற்பத்தியாளர்கள்
-
நிழற்குடையை மறைத்து த.வெ.க., பேனர்
-
இந்தியர்களின் மருத்துவ தரவுகள் சிங்கப்பூருக்கு கசிந்ததால் அதிர்ச்சி; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு
-
நேர்மையான துாய்மை பணியாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவிப்பு
-
புகார் பெட்டி
-
போலீஸ் செய்திகள்
Advertisement
Advertisement